பங்குனி மாதம் 19ம் திகதி, 2024 அன்று எங்கள் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற இல்லங்களுக்கிடையேயான தமிழ் விவாதப் போட்டியின் முடிவுகளைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். தமது அதீத விவாதத் திறனை வெளிப்படுத்திய சென்ட்ரல் போர்டிங் ஹவுஸ் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இறுதிச் சுற்று வரை தகுதி பெற்று தமது வாதத்தை சிறப்பாக முன்வைத்த Garret இல்லத்தினர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வு, அறிவுசார் சொற்பொழிவு மற்றும் மொழியியல் சிறப்பை வளர்ப்பதில் எங்கள் மாணவர்களின் அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் சிறந்த விவாதிகளாக சென்ரல் போடிங் ஹவுசைச் சேர்ந்த எஸ்.மேகலக்ஷன் மற்றும் Garret இல்லத்தைச் சேர்ந்த எஸ்.அகிலேஷ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
பேச்சுத்திறன், சிந்னைத்திறன் மற்றும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீதான மாணவர்களின் ஆர்வம் இந்த போட்டியின் சிறப்பை எடுத்தியம்பின.அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இந்நிகழ்வின் வெற்றிக்கு மேலும் வலுவூட்டியது.
இந்த நிகழ்வின் வெற்றிக்கு தமது பூரண ஒத்துழைப்பை நல்கிய பங்கேற்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்நிகழ்விற்காக தமது நேரத்தை ஒதுக்கி வருகை தந்து நடுவர்களாக கடமையாற்றிய K.M.அஹனாப் கலீல், R.J ஆன் மியூரிக்கா மற்றும் S.S. ரூபிணி ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன்,
இனி வரும் காலங்களிலும் எமது கல்லூரி மாணவர்களின் திறமையை வளரப்பதில் தமிழ் இலக்கிய மன்றம் தமது பூரண ஆதரவை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
Thrilled to share the exciting results from the first-ever Inter House Tamil Debating Competition held on March 19, 2024, at our college auditorium. With great pride, Central Boarding House emerged as champions, with Garret House securing the runner-up position.
This event showcased the exceptional talent and dedication of our students in fostering spirit of intellectual discourse and linguistic excellence. Among the outstanding participants, extend heartfelt congratulations to Master S. Megha Lakshan from Central Boarding House and Master S. Agilesh from Garret House for their remarkable achievement in being recognized as the best debaters in this competition.
Eloquence, critical thinking skills, and passion for the Tamil language and culture exemplified the essence of this competition. Dedication and hard work serve as inspiration to peers and reflect the values of our institution.
Express sincere appreciation to all participants, judges, faculty advisors, and staff members who contributed to the success of this event. Enthusiasm and support have been instrumental in making this competition a resounding success.
We are looking forward to continuing to foster a culture of intellectual curiosity, linguistic diversity, and respectful debate within our college community.